டெல்லியில் செயற்கை மழைக்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளது என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 380 புள்ளிகள் எனும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனைச் சரி செய்யும் வகையில் செயற்கை மழையை பெய்ய வைக்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அமைச்சர் மஜிந்தர் சிங் சிர்சா, செயற்கை மழை நடவடிக்கைக்காக விமானங்கள் தயாராக இருப்பதாகவும், அனைத்து அனுமதிகளும் கிடைத்துவிட்டதாகவும் கூறினார். மேலும், ஒரு வாரத்துக்குள் வானில் மேகங்கள் கூடும்போது இந்த நடவடிக்கை தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.