47வது ஆசியான் உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ரஹிம் வெளியிட்டுள்ள பதிவில், மலேசியா – இந்தியா இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகிய துறைகளில் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் இந்தியா ஒரு முக்கிய நட்பு நாடாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 26 முதல் 28ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் ஏற்பாடு குறித்து பிரதமர் மோடியின் அலுவலக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்வார் என அதிகாரி தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் முடிவை மதிக்கிறேன் எனக்கூறியுள்ள அன்வர் இப்ரஹிம், இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.