சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை திடீரென நச்சு நுரை பொங்கி காட்சியளித்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை கடந்த 2 நாட்களாக நுரை பொங்கியபடி காட்சியளிக்கிறது. பட்டினப்பாக்கம் முதல் ஸ்ரீனிவாசபுரம் வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நச்சு நுரை பொங்கி காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் ரசாயன கலந்த கழிவுநீரால் இந்த நுரை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால், மீன்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறிய மீனவர்கள், சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.