ஆந்திராவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நாராயண ராவ் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காக்கிநாடா மாவட்டம், துனி பகுதியில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாராயண ராவ் கைது செய்யப்பட்டார்.
அப்போது நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற வழியில் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக்கூறி இறங்கிய நாராயண ராவ், அங்கிருந்த ஒரு குளத்தில் திடீரெனக் குதித்து தற்கொலை செய்தார்.
இதனையடுத்து, நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட தேடலுக்குப் பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம்குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.