தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கனமழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாயினர்.
பட்டுக்கோட்டை அடுத்த உஞ்சிய விடுதி பகுதியில், சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.
இதில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட நிலையில், 100 ஏக்கர் பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் இருந்துவந்தன.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக, நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.