கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடி பயிற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் டியூட். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகப் பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்தப் படத்தில் இளையராஜாவின் கருத்த மச்சான் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கருத்த மச்சா பாடலுக்கு மமிதா பைஜூ நடனமாடி பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
இதனிடையே அனுமதியின்றி டியூட் படத்தில் பாடல் பயன்படுத்திய விவகாரத்தில், இளையராஜா வழக்கு தொடரலாம என நீதிமன்றம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.