நடிகர் துருவ் விக்ரம், டாடா பட இயக்குனருடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்திருந்த பைசன் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பைசன் திரைப்படத்திற்கு பிறகு, துருவ் விக்ரம் யார் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்து பல்வேறு செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபுவின் இயக்கத்தில் துருவ் விக்ரம் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.