தஞ்சையில் இருந்து சுமார் 4 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் இரண்டு சரக்கு ரயில்கள் மூலமாகத் திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அரவைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தஞ்சையில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாகக் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால், கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், சேமிப்பு கிடங்குகளில் நெல் மணிகள் தேக்கமடைந்துள்ளன.
இந்த நிலையில், பருவமழை காரணமாகக் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கொட்டி வைக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கின.
இதனால் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படவிருந்த நிலையில், சரக்கு ரயில்கள் மூலமாகச் சுமார் 4 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வரும் 31-ம் தேதிக்குள் அனைத்து பகுதிகளிலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.