முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடைபெற்றது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தியது.
மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிள், முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதன் விலை ஒரு கோடியே 67 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.