வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் மழைநீர் வெளியேறாததால் வீட்டுக்குள்ளே முடங்கிய பொதுமக்களை ரப்பர் படகுமூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டுப் பெய்த கனமழை காரணமாகக் கன்சால்பேட்டை பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.
அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல முடியாமல் தத்தளித்து வந்து பொதுமக்களை, தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலமாக மீட்டனர்.
மேலும், கன்சால்பேட்டையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.