தஞ்சை மாவட்டத்தில் மழை தணிந்ததால் சாலைகளில் நெல்லை கொட்டி உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் தேக்கமடைந்தன.
அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் விவசாயிகள் கடந்த 10 நாட்களாகக் காத்திருக்கும் சூழலில், மழை தணிந்து வெயில் அடிக்கத் தொடங்கியது.
இதனால் சாலைகளில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நெல்லை கொட்டி உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.