ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் தண்ணீர் செல்வதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தற்போது ஆயிரத்து 371 கனஅடியாக நீர் வரத்து உள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 272 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றில் துர்நாற்றத்துடன் ரசாயன நுரை செல்வதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.