மழைநீர் சேகரிப்பதன் அவசியம் மற்றும் சேகரிக்கும் முறைகுறித்து புதுச்சேரி அமைச்சர் ஜான்குமார் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் சமீப காலமாகப் பல்வேறு பகுதிகளில் குடிநீர் சரியில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழைநீரை சேகரிப்பதன் அவசியம் மற்றும் சேகரிப்பு முறைகுறித்து அமைச்சர் ஜான்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தனது வீட்டு மாடியில் பேரல்கள் மூலமாக மழைநீர் சேகரிக்கும் ஜான்குமார், அதனைச் சுத்திகரித்து எப்படி குடிப்பது என்றும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவரித்துள்ளார்.
குடிநீர் விஷயத்தில் அரசை மட்டுமே குறை சொல்லாமல், ஒவ்வொருவரும் பொறுப்புடன் மழைநீரை சேகரித்து தங்களையும், நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பாதுகாத்துகொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.