இந்திய ராணுவத்திற்கு சுமார் 4 லட்சம் அதிநவீன துப்பாக்கிகளை தயாரித்து வழங்கும் வகையில், உள்நாட்டு நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரத்து 770 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உள்நாட்டு ஒப்பந்தம், காலாவதியான துப்பாக்கிகளை மாற்றி, காலாட்படையின் தாக்குதல் திறனை அதிகரிக்க பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி Close Quarter Battle ரக துப்பாக்கிகளை வாங்குவதற்காக உள்நாட்டு நிறுவனமான Bharat Forge மற்றும் PLR Defence நிறுவனங்களுடன் முக்கிய ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தப்படி ஓராண்டிற்குள் துப்பாக்கி தயாரித்து வழங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்தக் கொள்முதல் மூலம் வெளிநாட்டு பாதுகாப்பு உபகரணங்களைச் சார்ந்து இல்லாமல், இந்தியாவின் தற்சார்பு நிலையை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.