திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புளியஞ்சோலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாகத் தங்க நகர், கோட்டப்பாளையம், வைரி, பி.மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
நீரில் மூழ்கிய பயிர்கள் முளைத்துவிடும் அபாயம் உள்ளதால் உடனடியாக மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.