தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு நடத்த மத்திய அரசுக் குழு அமைத்துள்ளது.
பருவமழை காரணமாக நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய மத்திய அரசுக் குழு அமைத்துள்ளது.
அதன்படி மத்திய உணவுத்துறை இணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குழுக்களில் தலா 2 தொழில்நுட்ப அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து இந்தக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.