தர்மபுரி மாவட்டம் அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட 15 வயது சிறுவனை, 6 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
அம்மாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரித்திக் என்ற சிறுவன் தென்பெண்ணை ஆற்று பகுதிக்கு சென்றபோது, திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் சிக்கிக்கொண்டான்.
தகவலறிந்து சென்ற காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனையடுத்து, தீயணைப்புத் துறை மற்றும் கிராம மக்களின் கடும் முயற்சியால் சுமார் 6 மணி நேரத்திற்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர்.
















