ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே சொகுசு பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 21 பயணிகள் உயிரிழந்தினர்.
பெங்களூருவில் இருந்து ஐதராபாத் நோக்கி 42 பயணிகளுடன் வால்வோ சொகுசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சின்னட்டகூரு என்ற பகுதியில் சென்றபோது திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்தது.
இதனால் செய்வதறியாது பயணிகள் தவித்த நிலையில, அவசரகால வழி மூலமாக 12 பயணிகள் வெளியே குதித்து உயிர் தப்பினர். கண் இமைக்கும் நேரத்தில் பேருந்து முழுவதுமாக பற்றி எரிந்ததில் 21 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
















