அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து எந்த கெடுவும் விதிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,10 நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும் என்று தான் கூறியதாவும், தனது கருத்தை ஊடகங்கள் தவறாக வெளியிட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணைப்பு குறித்து கேள்விக்கு விரைவில் நல்லது நடக்கும் என்றார்.மேலும் இன்று நீங்கள் பங்கேற்க இருக்கும் திருமண நிகழ்ச்சியில் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை ஏதும் இல்லை நல்லதே நடக்கும் என்றும் அவர் கூறினார்.
















