மதுரை மாவட்டம் பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.
சரந்தாங்கி கிராமத்தில் திமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் விஜய லட்சுமியின் கணவர் முத்தையன் நீர் வரத்து ஓடையை ஆக்கிரமித்து, தனியார் பிளாட்டுக்கு செல்ல சாலை அமைத்ததாக கூறப்பட்டது.
இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஓடையின் நடுவே மின் கம்பங்கள் நடப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், சாலையை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
ஆனால், அதிகாரிகள் முறையாக ஓடை ஆக்கிரமிப்பு அகற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதிகாரிகள் அலட்சியத்தையும் ஆளும் தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுதாரரே ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஓடை ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டது.
இந்நிலையில், ஓடை ஆக்கிரமிப்பை மனுதாரர் மற்றும் பொதுமக்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றினர். இதனையடுத்து, 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து நீதிமன்றத்தின் மூலம் இதற்கு தீர்வு பெற்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
















