தமிழகத்தில் கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் “கோல்ட்ரிப்” இருமல் மருந்தை அருந்திய குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மருந்தை தயாரித்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில், நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் ஆய்வு செய்து கண்டறியப்பட்ட தரமற்ற மருந்துகளின் பட்டியலை மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதில், 112 மருந்துகள் தரமற்றவை என வகைப்படுத்தப்பட்ட நிலையில், “கோல்ட்ரிப்” மருந்து அதில் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்காததே இதற்கு காரணம் என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
















