நாட்டில் வனப்பரப்பு அதிகரித்துள்ள நிலையில், காடுகள் வளர்ப்பில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும வேளாண்மை அமைப்பின் வனவள மதிப்பீடு 2025ம் ஆண்டுக்கான அறிக்கையை வெளியிட்டது.
அதில், இந்தியாவின் வனப்பரப்பு 72.7 மில்லியன் ஹெக்டேராக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தரவரிசையில் 10வது இடத்தில் இருந்த இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
மேலும், வனப்பரப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவின் வரையறையின்படி, ஒரு ஹெக்டேருக்கு மேல் பரப்பளவில் அடர்த்தியான மரங்களைக் கொண்ட அனைத்து நிலங்களும் வனப்பகுதி ஆகும்.
இந்த நிலத்தில் ரப்பர், காபி, தேங்காய் உள்ளிட்ட தோட்டங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
















