மெலிசா வெப்பமண்டல புயல் கரீபியன் கடலில் மெதுவாக நகர்ந்து வருவதால், ஜமைக்கா மற்றும் தெற்கு ஹிஸ்பானியோலா பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், சாண்டோ டாமிங்கோ பகுதியில் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சாண்டோ டாமிங்கோ சாலைகள் முழுவதும் வெள்ளப்பெருக்கால் ஆறு போல் காட்சியளிக்கிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் சேதத்தால் பலருக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
















