சைவ, வைணவ சமயங்கள்குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பாகப் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் தாக்கல் செய்த புகார் மனுவுக்குப் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஏப்ரல் மாதம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
இதற்கு அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் புகார் மனு அளித்தார். இந்த மனுகுறித்து அக்டோபர் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனப் பொன்முடிக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
















