ஆஸ்திரேலியாவில் சுப்மன் கில்லிடம் கைகுலுக்கிய பாகிஸ்தான் ரசிகர் பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
இந்நிலையில், அடிலெய்டில் சாலையில் நடந்து சென்ற சுப்மன் கில்லை பார்த்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சுப்மன் கில்லிடம் கைக்கொடுத்தார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா, பாகிஸ்தான் உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கைக்கொடுப்பது யார் என்று தெரியாமலேயே சுப்மன் கில் கைக்குலுக்கினார்.
பின்னர், கில்லுடன் கைக்குலுக்கிய அந்த நபர், பாகிஸ்தான் வாழ்க! என முழக்கமிட்டார். உடனடியாகக் கையை எடுத்துக் கொண்ட சுப்மன் கில், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
















