திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாகத் தலையாறு, வட்டக்கானல் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக, கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
மலைச்சாலை பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வெள்ளி, தலையாறு, வட்டக்கானல், பியர் சோலா போன்ற பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
மேலும், மலைச்சாலைகளில் உருவாகியுள்ள புதிய நீர்வீழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
















