திருப்பத்தூர் மாவட்டம் பழைய அத்திகுப்பத்தில் உயர்மட்ட பாலம் இல்லாததால் ஆற்றைக் கடந்து சென்று உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பழைய அத்திகுப்பத்தில் உள்ள பாம்பாற்று ஓடையில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் செல்கிறது.
இந்தச் சூழலில் அதே பகுதியை சேர்ந்த ராதா என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தைப் பாம்பாற்று ஓடையைக் கடந்து எடுத்துச் சென்று உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.
இதேபோல அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஆபத்தான முறையில் பாம்பாற்று ஓடையைக் கடந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருகின்றனர்.
உயர்மட்ட பாலம் அமைக்கப் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















