பலூச் படையின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் ஏராளமான பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பலுசிஸ்தான் மாகாணம், ஜெஹ்ரியில் இருதரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் டஜன் கணக்கான பாகிஸ்தான் ராணுவத்தினரும், ஆறு BRAS அமைப்பினரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோதல்கள் பலுசிஸ்தானில் தொடரும் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதி என்றும், பாகிஸ்தான் இராணுவத்தின் தொடர்ச்சியான ஒடுக்குமுறை இருந்தபோதிலும், பலுச் விடுதலைப் போராட்டம் பலவீனமடையாமல் மேலும் ஒருங்கிணைந்ததாக மாறியுள்ளதாக BRAS அமைப்பு தெரிவித்துள்ளது.
















