பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர், பாகிஸ்தான் தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர்கள், தங்கள் ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும், அசிம் முனீர் ஒரு சரியான ஆண்மகன் என்றால் படைகளைக் களத்திற்கு அனுப்பாமல், அவரே வந்து நேரடியாகச் சண்டையிடுமாறும் சவால் விடுத்துள்ளனர்.
சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு மத்தியில் TTP அமைப்பினர் நேரடியாக விடுத்துள்ள சவாலால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
















