அமெரிக்காவின் மினியாபோலிஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் மற்றும் பள்ளியில் நடந்த துயரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது மாணவி சோபியா ஃபோர்ச்சாஸ், இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஆகஸ்ட் 27-ம் தேதியன்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது சோபியா ஃபோர்ச்சாஸ் தலையில் சுடப்பட்டார். அவரது மூளையில் குண்டு பாய்ந்ததால், மூளையில் ஏற்பட்ட வீக்கத்தைக் கட்டுப்படுத்த அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தலையின் ஒரு பகுதி அகற்றப்பட்டது.
கோமாவில் இருந்த அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால், அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வீடு திரும்பிய சோபியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் திரண்டு நின்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த வீடியோ சமூக வளைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















