சமூக நீதியை பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை என்றால் தமிழக மக்களுக்கு எப்படி அதை வழங்க முடியும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
ஆட்சியாளர்கள் நெல்லை முறையாகக் கொள்முதல் செய்திருக்க வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் பயிர்களுக்காக ரூ.5,000 கோடி செலவு செய்ததாகக் கூறுகின்றனர் என்றும் செலவுகுறித்து விளக்கம் கேட்டால் முதலமைச்சருக்கு பதில் கூற தெரியாது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை என்றும் தேர்தலில் நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
















