மகாராஷ்டிராவில் போலீசாரால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் மருத்துவர் ஒருவர் வியாழக்கிழமையன்று இரவு ஹோட்டல் அறை ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது உள்ளங்கையில், தனது மரணத்திற்கு காவல்துறை உதவி ஆய்வாளர் கோபால் பத்னே தான் காரணம் எனவும், அவர் தன்னை நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் எழுதப்பட்டிருந்தது.
இந்த விவகாரம்குறித்து கடந்த ஜூன் 19-ம் தேதியே பெண் மருத்துவர் டிஎஸ்பியிடம் புகாரளித்திருந்தார். அதில் 3 போலீசார் மீது குற்றம்சாட்டியும் நடவடிக்கை எடுக்கப்படாதது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவின்பேரில் எஸ்.ஐ. கோபால் பத்னே பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம்குறித்து பேசியுள்ள அம்மாநில மகளிர் ஆணைய தலைவரான சித்ரா வாக், பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் துரதிர்ஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.
மேலும், விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவார் எனவும், பெண்களுக்கு உதவ தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தயாராக உள்ளதாகவும் சித்ரா வா தெரிவித்துள்ளார்.
















