ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி காணொளி வாயிலாகப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொழில்நுட்பம், கல்வி, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களுக்கு, ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பணி ஆணைகள் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 17-வது தவணையாக 51 ஆயிரம் இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தப் பாடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருவதாகப் பெருமிதம் கூறிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி சீர்திருத்தம் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
















