கர்நாடகாவில் ஆபத்தான வகையில் ஹெட்லைட்டுகளை பொருத்தி பயணம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இன்றைய காலத்தில் பலரும் தங்கள் வாகனங்களின் ஹெட்லைட்டுகள், சைலென்ஸ்ர்கள் உள்ளிட்டவற்றை விதிமுறைகளை மீறி மாற்றிப் பிறரின் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், கர்நாடகாவில் மகேந்திர தார் வாகனமொன்று, எதிரே வருபவரின் பார்வையை பறிக்கும் வகையிலான ஹெட்லைட்களுடன் சாலையில் சென்றது. இதனால் அந்த வழியாகச் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பான காணொலி வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட காரை பறிமுதல் செய்வதுடன், அதன் உரிமையாளரைக் கைது செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் ஹெட்லைட் பல்புகள் 7 வாட்களுக்கு மேல் இருக்க கூடாது, மேலும் எந்த வாகனத்திலும் நான்கு ஹெட்லைட்களுக்கு மேல் இருக்கக் கூடாது என விதிமுறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
















