இந்திய எல்லை பாதுகாப்புப் படையில் இதுவரை இல்லாத ஒரு சாதனையாக, இளம் பெண் காவலர் ஒருவர் பணியில் சேர்ந்த ஐந்தே மாதங்களில் அதிரடியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் தாத்ரி நகரைச் சேர்ந்தவர் ஷிவானி. இதுவரை காவலராகப் பதவி வகித்து வந்த இவர், பிரேசிலில் நடைபெற்ற 17வது உலக வுஷு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதால், தற்போது தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
BSF வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் பதவி உயர்வு பெற்ற முதல் பெண் காவலரான ஷிவானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
















