நாகை அருகே அரசு பேருந்தின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணத்திற்கு 40 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
வாஞ்சூர் ரவுண்டானா அருகே பயணித்தபோது பேருந்தின் பின்புற டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதையடுத்து பேருந்து தாறுமாறாகச் சாலையில் ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர். தொடர்ந்து துரிதமாகச் செயல்பட்டு, பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியதால் 40 பயணிகளும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
















