சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி – ஸ்டாலின் – உதயநிதி என மூன்றாவது தலைமுறை ஆட்சி செய்வதற்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தார்.
“ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர் என்றும், இபிஎஸ் தலைமையில் ஆட்சி மாற்றம் நடைபெறுவது உறுதி என்றும் அவர் கூறினார்.
அதிமுக – பாஜக கூட்டணி அற்புதமான மற்றும் ஆனந்தமான கூட்டணி என்றும், திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
















