மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் குழாய்கள் பதித்து குடிநீர் வழங்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 84வது வார்டுக்கு உட்பட்ட அனுப்பானடி பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணியின்போது ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வானத்தை நோக்கி தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது.
நள்ளிரவு முதல் சுமார் 8 மணி நேரமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் கொட்டி வீணாகும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
















