கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, குடியிருப்புப் பகுதியில் இருந்த விநாயகர் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் இடித்த சம்பவத்தால், பரபரப்பான சூழல் நிலவுகிறது.
கோவை சுந்தராபுரம் வி.எஸ்.என்.கார்டன் பகுதியில் ஓராண்டுக்கு முன் விநாயகர் கோயில் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். அப்போதே, கோயிலின் சுற்றுச்சுவர் அருகே உள்ள இடத்தை அபகரிக்க நினைத்த திமுக நிர்வாகியான திராவிட பாபு என்பவர், கோயிலை இடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் இந்த சதித்திட்டத்தை முறியடித்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், கோயிலை மாநகராட்சி ஊழியர்கள் முற்றிலுமாக இடித்து தரைமட்டமாக்கினர். கோயில் இடிக்கப்பட்டதற்கு, திமுக நிர்வாகி திராவிட பாபுதான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
















