ஆந்திர மாநிலம் கர்னூலில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கிரேன் கவிழ்ந்த நிலையில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
கர்னூலில் தனியார் ஆம்னி பேருந்த தீப்பிடித்து எரிந்ததில் 20க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்தை அகற்றும் பணியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
















