ஆந்திராவில் ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட கோரமான தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா என்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தார்
. 22 வயதான யுவன் சங்கர் ராஜா, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காத நிலையில், பண்டிகை முடிந்த பிறகு பெற்றோரை பார்ப்பதற்காக வீட்டிற்கு புறப்பட்ட யுவன், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















