ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெடுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
சிட்னியில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. டாஸ்வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 46.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 38.3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா சதமடித்து, விராட் கோலி அரைசதம் அடித்தும் அசத்தினர்.இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடடதக்கது.
















