ஆப்பிள், என்விடியா, ஜோஹோ உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற ஐஐடி, ஐஐஎம் படிக்க தேவையில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதுபோன்ற நிறுவனங்களில் பெரும்பாலும் பட்டப்படிப்பை முடித்தவர்களே பணியாற்றுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற உங்களுக்கு ஐஐடி அல்லது ஐஐஎம் படிப்பு தேவையில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது..
ஆப்பிள், என்விடியா, ஜோஹோவில் உள்ள ஊழியர்கள், இந்திய உயர்நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறவில்லை, மாறாக, சராசரி என்று நிராகரிக்கப்படும் மூன்றாம் தர கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது…
கணக்கெடுப்பின்படி, உயர்தொழில்நுட்ப நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், அதாவது 34 சதவிகிதம் பேர் மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களில் இருந்து வந்ததாக கூறியுள்ளனர்…. இது, இந்தியாவில் திறமை என்பது Ivy League-கிற்கு சமமான கல்வி நிறுவனங்களுடன் நின்றுவிடவில்லை என்பதை கோடிட்டு காட்டுகிறது…
பட்டங்களுக்கு அப்பாற்பட்ட திறன்கள் ஒருபுறம் இருந்தாலும், இன்றைய வேலைவாய்ப்புக்கான சந்தையில், ஒரு கல்லூரியின் பெயர் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளும் நோக்கில், தொழில்முறை நெட்வொர்க்கிங் செயலியான BLIND, செப்டம்பர் 12 முதல் 24ம் தேதி வரை ஆயிரத்து 602 இந்திய தொழில்நுட்ப ஊழியர்களிடம் ஆய்வு நடத்தியது.
அதில், பல தசாப்தங்களாக இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனங்களான IITs, IIMs, IISc மற்றும் BITS Pilani போன்றவை global career-க்கான அடித்தளமாக பார்க்கப்படுவது தெரியவந்துள்ளது.
Goldman Sachs, Visa மற்றும் Oracle போன்ற பிரபலமான ஆட்சேர்ப்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் நேரடியாக வளாகத் தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்து வரும் நிலையில் ஆப்பிள், என்விடியா மற்றும் ஜோஹோ போன்ற தொழில்நுட்ப ஜாம்வான்கள், பளிச்சிடும் பட்டங்களை விட, அதற்கும் அப்பாற்பட்ட திறன்களை அடையாளம் காண்கிறார்கள் என்பது வியப்பை தருகிறது.
பொதுவாக IIT,IIIT, NIT-யைச் சேர்ந்தவர்கள் நேர்காணலில் சிறப்பாக செயல்படுவதோடு, அவர்களில் 50 சதவிகிதம் பேர் சலுகைகளையும் பெறுகிறார்கள்… ஆனால் மற்றவர்களுக்கு 20 சதவிகித வெற்றி வாய்ப்பே கிடைக்கிறது. எனினும் இந்தப் போக்கானது வேகமாக மாறி வருவதாகவும், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐஐடிகளை மட்டும் பார்க்கலாமல், மூன்றாம் தர கல்லூரிகளில் இருந்து வரும் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துகின்றன…
சில பயிற்சிகளுடன், யார் வேண்டுமானாலும் தொழில்நுட்ப நிறுவனங்களில் நட்சத்திரமாக மின்னலாம் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது..
கல்வி நிறுவனங்கள், டயர் 1, டயர் 2, டயர் 3, டயர் 4 என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், கல்வி நிறுவனங்களின் பெயர், தங்களது தொழில் வளர்ச்சியில் எந்த தாக்கத்தையும் ஏற்படவில்லை என்று அங்கு படித்து பட்டம் பெற்றவர்கள் கூறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றனர்…
சுவாரஸ்யம் என்னவென்றால், உயர் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவது அதிக சம்பளத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதையும் ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது… சர்வதேச அளவில் ஏ.ஐ. தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், பணியமர்த்தும் போக்கிலும் அது புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது..
மாறிவரும் இந்த உலகில், ஆப்பிள் மற்றும் என்விடியாவின் இந்திய பணியாளர்களிடமிருந்து வரும் செய்தி ஒன்றுதான்… நீங்கள் எங்கு படித்தீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதுதான் முக்கியம்.
















