கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பாஜக இளைஞர் அணி வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கலந்து கொண்டார். தொடர்ந்து முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில இளைஞரணி தலைவர் SH சூர்யா, மத்திய அரசின் நேரடி வேலை வாய்ப்புகள் மூலமாக கடந்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் பேரும் மறைமுகமாக 8 லட்சம் பேரும் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக தெரிவித்தார்
















