திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தியையொட்டி ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏழு தலை கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தி, பரவசத்துடன் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து மனமுருகி வழிபட்டனர்.
















