தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு திமுக நிர்வாகி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பான சூழல் நிலவியது.
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்த 4வது வார்டு திமுக கிளை செயலாளரான சபரி ராஜன் என்பவர் தேநீர் கடை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டிற்கு மின் கட்டணம் 8 ஆயிரம் ரூபாய் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக கோவில்பட்டி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலத்தில் வந்து கேட்டபோது, மின் கட்டணத்தை கட்டுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இதனால், மனமுடைந்த சபரிநாதன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயன்றுள்ளார். உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















