தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மழைநீருடன், கழிவு நீரும் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் உள்ள உப்பிலி நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் மழைநீருடன், கழிவு நீரும் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தேங்கி நிற்கும் நீரால் உடல் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறும் மக்கள் நீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















