இந்திய எல்லையில் சீனா, வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாடு கோடு அமைந்துள்ள திபெத்தில் தங்கள் பக்கமுள்ள பகுதியில் சீனா கட்டுமானங்களைச் செய்து வருகிறது.
அதன்படி திபெத்தின் பாங்காங் ஏரியின் கிழக்குக் கரையில் வான் பாதுகாப்பு வளாகம் ஒன்றை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2020-ல் திபெத்தின் கல்வான் பள்ளத்தாக்கில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் இந்தச் சீன வான் பாதுகாப்பு வளாகக் கட்டுமானம் முழுவீச்சில் நடைபெறுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த வளாகத்தில் மறைவான ஏவுகணை ஏவுதளங்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு ஏவுகணைகளை ஏற்றிச் சென்று சுடும் வாகனங்களை பாதுகாத்து மறைத்து வைக்கக் கூரைகள் பொருத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தப் பாதுகாப்பு அமைப்பு, சீனாவின் நீண்ட தூர HQ-9 தரை – வான் ஏவுகணைகளுக்கு ஏற்றவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
தற்போதே இருதரப்பு உறவு மீண்டும் மெல்ல துளிர்விடும் நிலையில், ராணுவ உள்கட்டமைப்பை தொடர்ந்து பலப்படுத்தும் சீனாவின் செயல் தேவையற்றது என உலக அரசியல் நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.
















