தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டுகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் தென்மண்டல ஹைதராபாத் நகர காவல்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த காவலர்களை கவுரவிக்கும் வகையில் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வத்துடன் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
















