மலேசிய விமான நிலையத்தில் நடன கலைஞர்களின் வரவேற்பை கண்டு உற்சாகமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கைகளை அசைத்து நடனமாடியது வைரலாகி உள்ளது.
மலேசியாவில் 22வது ஆசியான் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது நடனக் கலைஞர்களின் உற்சாக நடனத்தைக் கண்ட டிரம்ப், அவர்களுடன் இணைந்து கைகளை அசைத்து நடனமாடினார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.
















